News January 23, 2025

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியல்

image

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள், மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று (ஜன.22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Similar News

News January 12, 2026

தி.மலை: செல்வம் பெருக இங்கு போங்க!

image

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும்.இந்த கோயிலில் அம்மன் பக்தர்களுக்கு அருள் தந்து வருகிறார், மேலும் செவாய்க்கிழமைகளில் வந்து அம்மனை தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் கடன் சுமை குறைந்து செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. குழந்தைகளின் கல்வி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.ஷேர்

News January 12, 2026

தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவண்ணாமலை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

image

தி.மலை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, கலெக்டர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2முறைக்கு மேல் பிடிபடும் மாடுகளைப் பொது ஏலத்தில் விடவும், உத்தரவிடப்பட்டதுள்ளது.

error: Content is protected !!