News January 23, 2025
மானிய விலையில் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி

தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல் போனால் இயங்கும் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை 94440 73322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.
Similar News
News December 17, 2025
காஞ்சிபுரம்: வங்கி பூட்டை உடனித்த வடமாநில வாலிபர்!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் கடந்த டிச.14ஆம் தேதி இரவு பயங்கர சத்தம் கேட்டு வந்த கட்டட உரிமையாளர் ஜஸ்டின், இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டதைக் கண்டு, போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே விரைந்த போலீசார் சிசிடிவி-யை வைத்து விசாரித்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கோர்த்(29) என்பவரை கைது செய்தனர்.
News December 17, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் புதிய இளம் வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
News December 17, 2025
காஞ்சிபுரம்: வாஷிங் மிஷின் வெடித்து விபத்து!

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன்(42). இவரது மனைவி ஷியாமளா. இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று(டிச.16) வாஷிங் மிஷினில் ஷியாமளா துணி துவைத்தபோது திடீரென வெடித்தது. வாஷிங் மிஷின் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே படப்பை போலீசார், தீயணிஅப்புத் துறைக்கு தகவல் அளித்ததும், விரைந்த அவர்கள் தீயை அணைத்தனர்.


