News March 27, 2024
ரூ.17,000 கோடி நிறுவன அதிபரான தினக்கூலி

ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. அதன் தலைவரான ரஜிந்தர், 9ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டவர். அவர் தனது 14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக வேலை பார்த்துள்ளார். 1991ல் கூட்டுத்தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, டிரிடென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது அவருக்கு ரூ.12,368 கோடி, டிரிடென்ட் நிறுவனத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
Similar News
News April 7, 2026
திருமணம் சர்ச்சை.. த்ரிஷா பரபரப்பு பதிவு!

சினிமாவிலிருந்து விலகும் முடிவில் த்ரிஷா உள்ளதாக SM-களில் தகவல் பரவியது. இந்நிலையில், கோபத்துடன் த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகிறது. அதில், நான் சினிமாவை விட்டுவிட்டேன். ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன், 2 வயதுடைய 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன் போல. இன்றைய பொய் கதைக்கான அளவு போதுமா? (அ) இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்று கேட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News April 7, 2026
தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.
News April 7, 2026
வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.


