News January 23, 2025
UPI பேமெண்ட்: கலக்கத்தில் சிறு, குறு வியாபாரிகள்!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக அதிக தொகை பெற்ற குறு, சிறு வர்த்தகர்களுக்கு, வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதால், TN முழுவதும் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள் கலக்கமடைந்துள்ளனர். காய்கறி, மளிகைக் கடை என அனைத்திலும் UPI பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதில் GST பதிவு செய்யாத, ஆண்டுக்கு ₹40 லட்சத்திற்கு மேல் UPI பரிவர்த்தனை நடைபெற்ற வர்த்தகர்களுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அளித்து வருகிறது.
Similar News
News January 4, 2026
பொங்கல் பரிசுத் தொகை.. ₹3,000 உறுதியானது

பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும், ₹3,000 பரிசுத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பை இன்று CM ஸ்டாலின் வெளியிடுவார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, நாள், நேரம் குறிப்பிட்ட டோக்கன்கள் இன்று முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளன. So, ரெடியா இருங்க!
News January 4, 2026
‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகாதா?

ஜன.9-ல் ‘ஜனநாயகன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பல வாரங்களுக்கு முன்பே UA சான்றிதழுக்கு சென்சார் குழு பரிந்துரைத்தும், தற்போது வரை தரப்படவில்லை என தவெகவின் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். படத்தை தடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தடைகளை தகர்த்தெறிந்து வெல்வோம் என்றும் கூறியுள்ளார்.
News January 4, 2026
சிக்கன், முட்டை விலை நிலவரம்!

கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்திலிருந்த சிக்கன் விலை சற்று குறைந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டைக்கோழி கிலோவுக்கு ₹5 குறைந்து ₹90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கறிக்கோழி கிலோவுக்கு ₹142-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக முட்டையின் விலை மாற்றமின்றி ₹6.40 ஆகவே நீடிக்கிறது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் விலை ₹250-₹300 வரை விற்பனையாகிறது.


