News January 23, 2025
கோவை ஆட்சியருக்கு விருது

மக்களவை தேர்தல் பணி, கோவை மாவட்டத்தில் அமைதியாக நடந்தது. தேர்தல் பணியை சிறப்பாக மேலாண்மை செய்ததற்காகவும், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக, கோவை கலெக்டர் கிராந்திகுமாருக்கு விருது வழங்கப்படுகிறது. வரும், 25ல் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரவி, வழங்குகிறார்.
Similar News
News October 20, 2025
நாளையும் மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிந்து பாறாங்கற்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று, இன்று என இரு தினங்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கற்களை வெடிவைத்து தகர்க்க இருப்பதால், நாளையும் ரயில் சேவை (அக்.21) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News October 20, 2025
கோவையில் இங்கு பட்டாசு வெடிக்க மாட்டார்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இதனை பாதுகாப்பதற்காக, கடந்த 26 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.SHAREit
News October 20, 2025
சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷானு (47) என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர், சூளூர் விமானப்படை தளத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பாதுகாப்பு கோபுரத்தில் பணியில் இருந்தபோது, ஷானு தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் சூளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.