News March 27, 2024
தஞ்சாவூர் மாவட்டம்: 718 பேர் தேர்வு எழுதவில்லை

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 71 பேர் பங்கேற்று எழுதினா்; 718 பேர் தேர்வு எழுத வரவில்லை; தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பாா்வை குறைபாடுடைய 19 மாணவா்களும், செவித்திறன் குறைபாடுடைய 23 மாணவா்களும் தேர்வு எழுதினா். இவா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
Similar News
News September 25, 2025
தஞ்சாவூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 25, 2025
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு

2024-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையும், செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 2,996 ஏக்கர் பரப்பிற்கு ரூ.157 லட்சம் நிவாரண தொகை,பெங்கல் மழையால் பாதிக்கப்பட்ட 2,325 ஏக்கர் பரப்பிற்கு ரூ.160 லட்சம் நிவாரண தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவிப்பு.
News September 25, 2025
குறுவை சாகுபடி 1 லட்சம் ஏக்கர் மேல் அறுவடை என ஆட்சியர் அறிவிப்பு

2025-26 ஆம் ஆண்டு 1,97,100 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு
1,00,270 ஏக்கர் பரப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் 21,980 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 346 மெட்ரிக் டன்னும் தனியார் விற்பனை நிலையங்களில் 1980 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.