News March 27, 2024
ஐபிஎல் கேரியரை சிக்ஸருடன் தொடங்கிய சமீர்

சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். டி20 பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கும் ரஷீத் கான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட்டு ஐபிஎல் கேரியரில் தனது ரன் கணக்கை தொடங்கினார். 2024 ஐபிஎல் ஏலத்தில் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. அவர் இதற்கு முன்பாக உள்ளூர் டி20 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்கள் குவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
எப்போது திருமணம்? மனம் திறந்த ரொனால்டோ!

கால்பந்து உலகின் GOAT கிறிஸ்டியானா ரொனால்டோ, தன் திருமணம் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், கோப்பையை கையில் ஏந்தியபடி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ரொனால்டோ – ஜார்ஜினா ஜோடி, கடந்த 10 ஆண்டுகளாக, 5 குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் என்கேஜ்மெண்ட்டை முடித்தவர்கள் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.
News November 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 6, 2025
‘Money Heist’ பாணியில் ₹150 கோடி பண மோசடி

பிரபல திரில்லர் வெப் சீரிஸான ‘Money Heist’ பாணியில் டெல்லி கேங் ஒன்று ₹150 கோடி பண மோசடி செய்துள்ளது. வெப்சீரிஸில் இன்ஸ்பைர் ஆன குற்றவாளிகள் Professor (அர்பிட்), அமாண்டா (பிரபாத்), ஃப்ரெடி (அப்பாஸ்) என பெயர் மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பங்குச்சந்தை டிப்ஸ் வழங்கி, அதிக லாபம் ஈட்டலாம் என கூறி, பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர்.


