News January 22, 2025

பசுத் தீவன விதைகள் மானியத்தில் பெறலாம்

image

திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன், மாநில தீவனம் அபிவிருத்தி திட்டம், 2024 – 25ம் ஆண்டின் கீழ் பசுத்தீவனம் பயிரிடுவதற்கு வருவாய் கோட்டத்தில் மானாவாரி சாகுபடியில், 70 ஏக்கர், நஞ்சை சாகுபடியில், 40 ஏக்கர் என மொத்தம் 110 ஏக்கரில் சோளம் மற்றும் காராமணி தீவன விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Similar News

News September 9, 2025

திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

image

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தாயரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)

News September 9, 2025

திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)

News September 9, 2025

திருவள்ளூர்: whats App இருக்கா உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை whats App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!