News January 22, 2025

ஜன.26 ஆம் தேதி கிராம சபை கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எதிர்வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் துவங்கும் கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 24, 2025

பந்தலூர் அருகே நூதன போராட்டத்தால் பரபரப்பு!

image

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில், நகராட்சி மூலம், 51 பணிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், மார்ச் மாதம் பணிகளை நிறைவு செய்தனர். ஆனால் பணிகள் முடிந்தும் இன்னும் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்ததாரர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News December 24, 2025

உதகையில் கூண்டோடு கைது!

image

மத்திய அரசு, லைஆகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, 4 தொகுப்பு சட்டங்களை அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யக்கோரி, நேற்று உதகை ஏ.டி.சி., பகுதியில் சி.ஐ.டி.யூ சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

News December 24, 2025

நீலகிரி: நல்ல சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW

image

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து மேலும் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 2026 ஜன.02 கடைசி தேதி ஆகும். வேலைதேடும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!