News January 22, 2025

தேர்தல் அலுவலர் மாற்றம் (2/2)

image

இடைத்தேர்தலில் கர்நாடாகவைச் சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அது எப்படி அவரது மனுவை ஏற்கலாம் என சுயேச்சை வேட்பாளர் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்சையான பிறகு அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. வேறு மாநிலத்தில் வாக்குரிமை வைத்திருப்பவர், மற்றொரு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என விதியுள்ளது. இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததால், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்.

Similar News

News October 26, 2025

ஈரோடு: வீட்டு வரி பெயர் மாற்ற செய்ய எளிய வழி!

image

ஈரோடு மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News October 26, 2025

ஈரோடு: பள்ளியில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்

image

மத்திய அரசின் ஏகலைவா உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பள்ளி முதல்வர், ஆசிரியர், விடுதி காப்பாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10th, 12th, டிகிரி முடித்து இருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 முதல் அதிகமா ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு https://nests.tribal.gov.in/ என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கவும். அக்.28-ம் தேதி கடைசி. (அரசு வேலை தேடும் நபருக்கு SHARE பண்ணுங்க)

News October 26, 2025

சென்னிமலையில் நாளை இதற்கு அனுமதி இல்லை

image

சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை, நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதனால் 2 நாட்களும் சென்னிமலை நகர் மற்றும் மலை கோவில் பாதைகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மலைப்பாதை வழியாக நான்கு சக்கர வாகனங்கள், கார் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருக்கோவில் பஸ் மூலம் கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!