News January 22, 2025
தனியார் இ-சேவை மையத்தில் திடீர் விசாரணை

பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது இ-சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஒவ்வொரு மனுவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
Similar News
News September 18, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டையில் இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்:
1. அரக்கோணம் நகராட்சி – தி டவுன்ஹால் காந்தி சாலை, அரக்கோணம்
2. அரக்கோணம் வட்டாரம் – அரசு மேல் நிலைப் பள்ளி, வளர்புரம்
3. சோளிங்கர் – வன்னியர் சத்திரம், தென் வன்னியர் தெரு, சோளிங்கர்
4. வாலாஜா – VPRC கட்டடம், V.C.கோட்டூர்
5. ஆற்காடு – PVM அரசினர் மேல்நிலைப் பள்ளி, சக்கரமல்லூர்
News September 18, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 27 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
News September 17, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டையில் நாளை செப்டம்பர் 18 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் தி டவுன் ஹால் காந்தி சாலை அரக்கோணத்திலும், சோளிங்கர் வன்னியர் சத்திரம் தென் வன்னியர் தெருவிலும், அரசு மேல்நிலைப்பள்ளி வளர்புரம், அரக்கோணம் வாலாஜா விபிஆர்சி கட்டிடம், வி, சி, மோட்டூர் மற்றும் ஆற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் சக்கரமல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.