News January 22, 2025
ஆட்சியருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்திய மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் அங்கு கல்குவாரி ஒன்று அமைய உள்ளதாக தகவல்கள் பரவியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கார்டுகளை ஒப்படைத்தனர். இந்த நிலையில் இன்று(ஜன.22) அங்கு ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் வருகை தர உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
வீட்டு வசதி வாரிய பயனாளிகளுக்கு நல்ல செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு வசதி பிரிவு உட்பட்ட திட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தருவதற்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகை வரும் 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News August 28, 2025
தூத்துக்குடி பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

தூத்துக்குடி மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.