News January 22, 2025

9 வயதில் திருமணம்.. மசோதா நிறைவேற்றம்

image

பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றி ஈராக் ஆட்சியாளர்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை, 18ல் இருந்து 9ஆக குறைத்துள்ளனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஜஃபரி இஸ்லாமிய விதிகளின் படி, 9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கலாம். ஆனால் இது பெண்களின் வாழ்க்கைக்கு ஆபத்தாக அமையும் என எதிர்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

Similar News

News August 20, 2025

M.Ed. விண்ணப்பப்பதிவு.. இன்றே கடைசி நாள்

image

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான M.Ed. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.11-ல் தொடங்கியது. இப்பாடப்பிரிவில் 6 அரசுக் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஆக.20) நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஆக.25-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

News August 20, 2025

AUS vs SA முதல் ODI: LSG வீரர்கள் அசத்தல்

image

SA vs AUS இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 98 ரன்கள் வித்தியாசத்தில் SA வென்றது. SA அணியில் மார்க்ரம் பொறுப்புடன் விளையாடி 81 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்தார். அந்த அணியில் அதிக ரன்கள் அடித்தது அவர் தான். அதைப்போல் ஆஸி., அணியில் மிட்சல் மார்ஷ் 88 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் IPL-ல் LSG அணிக்காக சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது அதே பார்மை தொடர்கின்றனர்.

News August 20, 2025

சுதர்சன் ரெட்டிக்கு திமுக ஆதரவு

image

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA சார்பில் போட்டியிடும் CPR-க்கு எதிராக I.N.D.I.A கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். தமிழரான CPR-க்கு திமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக வெளிப்படையாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!