News January 22, 2025

IIT கேம்பஸ் இண்டர்வியூவில் சாதி பாகுபாடா? NCSC உத்தரவு

image

IIT-களில், கேம்பஸ் இண்டர்வியூவ்களில், சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டு தீரஜ் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். மாணவர்கள் தங்களின் சாதிப் பெயரை சொல்லும்படி கட்டாயப்படுத்தப் படுவதாக அதில் கூறப்பட்டது. இதை விசாரித்த NCSC ஆணையம், இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி, மும்பை IIT மற்றும் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Similar News

News September 18, 2025

பாண்டியர் கோட்டை புகும் சோழ இளவல்?

image

சங்க கால தமிழ், எயினர் மரபு, ரணதீர பாண்டியனின் தீரம் என ‘யாத்திசை’ படத்தை வரலாற்று பிரமாண்டமாக படைத்திருப்பார் இயக்குநர் தரணி ராசேந்திரன். அவர் அடுத்து இயக்கும் படத்தில், சோழ இளவல் ‘பொன்னியின் செல்வர்’ ரவி மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க இருக்கிறாராம்.

News September 18, 2025

கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS: CM ஸ்டாலின்

image

திராவிடம் என்றால் என்ன என்று தனக்கு தெரியாது என சொன்னவர், தற்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பதாக EPS-ஐ CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாகவும், கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் EPS-ன் தரத்தை மக்கள் அறிவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ரெய்டில் இருந்து தப்பிக்க அதிமுகவை அடகு வைத்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News September 18, 2025

சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகளை கைவிட முடிவு

image

புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 256 அறிவிப்புகளை, செயல்படுத்த சாத்தியமில்லை என்பதால் அதை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிகள் கூறும்போது, 2021-ல் புதிய அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை வெளியான 8,634 அறிவிப்புகளில், 4,516 அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!