News January 22, 2025
மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

திருச்சியைச் சேர்ந்த சாலமன் (எ) பிரவீன் நேற்று முன்தினம் தெப்பக்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 19, 2025
தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை
News September 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1999 மனுக்கள்

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கைலாசபுரத்தில் 196, மணிகண்டத்தில் 180, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 186, லால்குடியில் 480, நடுப்பட்டியில் 464, தா.பேட்டையில் 334, எரகுடியில் 458 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.