News March 27, 2024
தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 28, 2025
கிருஷ்ணகிரி: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

கிருஷ்ணகிரி மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள், வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் நெற்பயிா்க் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா். விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொது சேவை மையங்களை அணுகி, ஏக்கருக்கு ரூ. 574.50 செலுத்தி காப்பீடு செய்து பயன்பெறலாம்.
News October 28, 2025
கிருஷ்ணகிரி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <


