News January 22, 2025
தூத்துக்குடியில் மணப்பெண் அலங்கார பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாளை மணப்பெண் அலங்கார பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் மணப்பெண் அலங்கார பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கு உரிய மானிய திட்ட விவரங்களை பெறலாம்.18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். மாணவிகளுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும் என சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News October 24, 2025
தூத்துக்குடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் (அக்டோபர் 27) அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.SHARE!
News October 24, 2025
திருச்செந்தூரில் 14 பேரை கடித்த தெருநாய்!

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில், நேற்று தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் வியாபாரி என 14 பேரைத் துரத்திக் கடித்து காயப்படுத்தியது. படுகாயமடைந்த அனைவரும் பிச்சிவிளை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.


