News January 22, 2025
இதுவரைக்கும் 2 விஷயத்துக்குதான் பயந்தேன்

தனது சினிமா கெரியரில் 2 விஷயங்களுக்கு மட்டுமே பயப்பட்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல் நாள் படப்பிடிப்பின்போதும், அப்படத்தின் ரிலீஸின்போதும் பயந்ததாகக் கூறினார். 25 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பது சாதாரண காரியம் அல்ல எனக் கூறிய மாதவன், மக்களின் ஊக்கம்தான் தன்னை தொடர்ந்து பயணிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News January 13, 2026
மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ரிலீஸ்!

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.
News January 13, 2026
பிரபல பாடகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல பாடகர் சமர் ஹசாரிகா (75) உடல்நலக் குறைவால் காலமானார். அசாம் திரையுலகில் பின்னணி பாடகராக கொடி கட்டி பறந்த இவர், பாரத ரத்னா பெற்ற பூபன் ஹசாரிகாவின் சகோதரர் ஆவார். தமிழ் திரையுலகில் கோலோச்சிய SPB போல, அசாமில் புகழ்பெற்று இருந்துள்ளார். அம்மாநில கலாசாரத்தை போற்றும் வகையில் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 13, 2026
செல்வப்பெருந்தகை மதிப்பு இழந்து வருகிறார்: தமிழிசை

விஜய் விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக செல்வப்பெருந்தகை சொல்வதில் அர்த்தமே இல்லை என தமிழிசை கூறியுள்ளார். மேலும், கூட்டத்தில் சிக்கி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதற்காக தெலங்கானாவில் ஒரு நடிகரை காங்கிரஸ் CM கைது செய்தார். ஆனால் விஜய்க்காக பேசி இங்குள்ள காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குளிர்காய்கிறார் என்றும், கட்சிக்குள் தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதால் அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.


