News January 22, 2025
ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலம், ரதன்கர்- மோலிசர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே இரு வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் வரும் ஜன.25 மதியம் 02.55 மணிக்கு கோவையில் புறப்படும் கோவை- ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயில் பிகனேர் ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். பிகனேர் ஸ்டேஷன் முதல் ஹிசார் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News November 15, 2025
பெருமாள் கோவில் கரட்டில் அழுகிய ஆண் சடலம்!

சேலம் கோல்நாயக்கன்பட்டி பெருமாள் கரடு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உடனடியாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியூர் காலணியை சேர்ந்த கூலித் தொழிலாளி குப்பன் (57) என்பதும் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
News November 15, 2025
சேலம் அருகே சோகம் இளம்பெண் மரணம்!

காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் இளம் பெண் சடலம் கிடப்பதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் மஞ்சு ஸ்ரீ என்பதும் 19 வயதான அவர் ஏன் எப்படி கிணற்றில் இறந்து கிடந்தார். என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 15, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


