News January 22, 2025
டிப்ளமோ போதும்..மாசம் ₹60 ஆயிரம் வரை சம்பளம்!

திருச்சி, ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் 400 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 27 – 29 மிகாமல் இருக்க வேண்டும். கணினி வழித் தேர்வு உண்டு. தகுதிக்கேற்ப வருடம் ₹7.5 லட்சத்தில் இருந்து ₹12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் பிப். 1 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். <
Similar News
News December 13, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
News December 13, 2025
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.
News December 13, 2025
மெஸ்ஸியை சந்திக்கிறாரா ராகுல் காந்தி?

‘GOAT இந்தியா டூர்’ நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாத் செல்கிறார். அங்கு, CM ரேவந்த் ரெட்டி தலைமையிலான கால்பந்து அணி, மெஸ்ஸி தலைமையிலான அணியுடன் நட்பு போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிக்கு முன்னதாக ராகுல், மெஸ்ஸியை அவர் தங்கும் அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.


