News March 27, 2024
ஆவின் பால் விநியோகம் தாமதம்

சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பால் விநியோகம் தாமதம் ஆகலாம். இதனால், தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
திமுக ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் Compromise: இபிஎஸ்

கோவையில் பெண் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை, சென்னையில் மாணவி மாயம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise ஆகியிருப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த நேரத்திலும் பெண்களால் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, இது பெண்களுக்கான அரசு என்று கூறும் ஸ்டாலின், அதற்கு கூச்சப்பட வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 7, 2025
நீங்க அடிக்கடி Chest X-ray எடுக்குறீங்களா?

Full body check up செய்யும் போது, பலரும் Chest X-ray எடுப்பார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், இதனை செய்ய வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அடிக்கடி இந்த Chest X-ray எடுப்பதால், கதிர்வீச்சுக்கு ஆளாகலாம் என எச்சரிக்கின்றனர். இதனால் இருமல், காய்ச்சல், TB போன்ற பிரச்னைகள் வரும் அபாயம் உள்ளதாம். எனவே, டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே, இந்த Chest X-ray எடுப்பது சிறந்தது.
News November 7, 2025
BREAKING: தவெக சின்னம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ECI-யை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தவெக ECI-ல் மனு அளிக்க உள்ளது. இதில் தவெகவுக்கு ஏற்ற சின்னம் எது? உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.


