News January 22, 2025
புதுக்கோட்டைக்கு அரிசி மூட்டைகள் வருகை

தெலுங்கானா மாநிலத்திலிருந்து புதுகைக்கு நேற்று சரக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2,646 டன் அரிசி மூட்டைகள் வந்தன. ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயில்களிலிருந்து சுமை துக்கும் தொழிலாளிகள் இறக்கி பின்னர் லாரியில் ஏற்றினர். இந்த அரிசிகள் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 24, 2026
புதுக்கோட்டை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
News February 24, 2026
புதுகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

புதுக்கோட்டை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 24, 2026
புதுகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுகை மாவட்ட நிர்வாகம் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுகை மன்னர் கல்லூரியில் வரும் பிப்.28ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலை தேடுவோர் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, உள்ளிட்டவற்றுடன் வரவேண்டும் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


