News January 22, 2025
நாகை: கிராம சபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு, அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
நாகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
நாகை கலெக்டர் கடுமையான எச்சரிக்கை

உவர் நீர் இறால் பண்ணைகளுக்கான பதிவுச் சான்றினை புதுப்பிக்காமல், நாகை மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு விண்ணப்பம் அளிக்கலாம். பதிவுச் சான்று பெறாமலும், பதிவினை புதுப்பிக்காமலும் இறால் வளர்க்கக்கூடாது என கலெக்டர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 21, 2025
பொதுமக்களுக்கு போலீஸ் சூப்ரண்ட் உறுதி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஆக.20) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு புகார்கள் தொடர்பாக 18 மனுக்களை பெற்ற அவர், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.