News January 22, 2025
வாக்குகள் சிதறாமல் இருக்க இபிஎஸ் போடும் திட்டம்

வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்றோம். ஆனால், வாக்குகள் சிதறாமல் இருக்க எதிரணியினர் வியூகம் வகுக்கின்றனர். அதிமுகவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்றார். இது, அதிமுகவின் கூட்டணி கதவு திறப்புக்கான க்ரீன் சிக்னல் என பலரும் பேசி வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
சாக்ரடீஸ் பொன்மொழிகள்

*உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம். *வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும். *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது. *எல்லாப் போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன. *திடீரென்று மாறும் ஒருவருக்காக கவலைப்படாதீர்கள். அவர் தனது நடிப்பைக் கைவிட்டு, தனது உண்மையான சுயத்திற்குத் திரும்பியிருக்கலாம்.
News October 17, 2025
கர்நாடகாவில் அரசு இடங்களில் RSS-க்கு தடை

பள்ளிகள், கல்லூரிகள் என அரசுக்கு சொந்தமான இடங்களில் RSS நிகழ்ச்சியை தடை செய்ய கர்நாடகா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பள்ளி குழந்தைகள் சிந்தாந்த ரீதியில் தூண்டப்படுவதாக வந்த புகார்கள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார். மேலும், RSS நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 491 ▶குறள்: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. ▶பொருள்: ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.