News January 22, 2025
பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
Similar News
News February 23, 2026
கேர்மாளம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுபசுவன்மாளம் கிராமத்தில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை பாதுகாத்துக் கொண்டிருந்த விவசாயி மாதேவசாமி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். நேற்று இரவு நேரிட்ட இந்த சோக சம்பவம் குறித்து வனத்துறையினரும், கடம்பூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 23, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 23, 2026
ஈரோடு: உங்க வீட்டில் குழந்தை இருக்கா? முக்கிய தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் பிப்.23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக), வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது வழங்கப்படும். கண் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT


