News January 22, 2025
திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திக் வயது 35. வணிக நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான கார்த்திக், அடிக்கடி மது குடித்துவிட்டு, திருமணத்தை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் மன வேதனையில் இருந்த கார்த்திக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் பாதுகாக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News October 29, 2025
திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்துப பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
News October 28, 2025
உடுமலையில் இறைச்சி பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி!

உடுமலை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர் குறித்த கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட www.tnskill.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


