News January 22, 2025

புதிய சாதனை படைத்த வைஷ்ணவி ஷர்மா

image

19 வயது மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷ்ணவி ஷர்மா படைத்துள்ளார். மலேசிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை எடுத்துள்ளதால், U19 டி20 உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சாக இது பதிவாகியுள்ளது.

Similar News

News March 7, 2026

திருவாரூர்: அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கும் பணி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்த கால் முகூர்த்த விழா நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

திமுக டெபாசிட்டை இழக்கும்: ராஜேந்திர பாலாஜி

image

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும், அனைத்து இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார் என விமர்சித்த அவர், எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது என்றார். மேலும், நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது; எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

News March 7, 2026

காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

image

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!