News March 27, 2024
புதுகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை ,பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 47 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த கற்பித்தல் மையங்களில் கற்பித்தல் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 26.3.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாஹி ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Similar News
News November 19, 2024
தண்டலை ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 19, 2024
அறந்தாங்கி : புதிய பள்ளி கட்டிடம் ஆய்வு செய்த அமைச்சர்
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 19, 2024
கீரமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.