News January 22, 2025

ஓட்டல் தீ விபத்தில் 66 பேர் பலி

image

துருக்கியில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News March 10, 2026

காங்கிரஸை போல் விசிகவிலும் இந்த பஞ்சாயத்தா?

image

சீட் ஷேரிங்கின் போது தவெக/திமுக ஆதரவு என காங்., 2 அணிகளாக இருந்ததை போல விசிகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்குவதால் விசிகவில் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஆனால் இதற்கு கவலைப்படாத விசிகவினர் சிலர் CM புகழ் பாடுவதிலேயே கருத்தாக இருக்கிறார்களாம். எனவே CM விசுவாசிகளுக்கு சீட் வழங்கக்கூடாது என திருமாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 10, 2026

30-30-30 ரூல் ட்ரை பண்ணி பாருங்க..

image

30-30-30 விதி தெரியுமா? காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பசியைக் குறைக்கும். அடுத்த, 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி காலை 1 மணி நேரத்தை செலவிட்டால், அது நாள் முழுவதும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News March 10, 2026

இரவில் அனைவருக்கும் வந்தது.. உடனே செக் பண்ணுங்க

image

இந்தியாவின் சில நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம், போதுமான அளவு சிலிண்டர் கையிருப்பில் உள்ளதாக BPCL, HPCL நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளன. எனினும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.

error: Content is protected !!