News January 21, 2025

90 மணி நேர வேலைக்கு வாய்ப்பு? நாராயண மூர்த்தி

image

வாரத்திற்கு 70, 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய Infosys நாராயண மூர்த்தி, இதை யாரும் ஊழியர்கள் மீது திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். தான் முன்பு கூறியது தனிப்பட்ட கருத்து, பொது விவாதத்திற்கானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 40 ஆண்டுகளாக காலை 6.20க்கு அலுவலகம் சென்று இரவு 8.30 மணி வரை பணி செய்ததாகவும், அதனால் தான் பேசியதில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

image

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 26, 2025

Beauty Tips: ₹3000 கிரீம் வேணாம்.. ₹10 படிகாரம் போதும்

image

அழகுக்காக தாத்தா காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் படிகாரம். இதில் உள்ள ஆண்டி-ஏஜெண்ட்கள் முகப்பரு, Open Pores, எண்ணெய் வடிதல் பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யுமாம் ▶முதலில் படிகாரத்தை பொடியாக அரைத்து, ரோஸ் வாட்டர் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள் ▶இதனை முதலில் உங்கள் கையில் தடவி அலர்ஜி ஆகிறதா என சோதித்துப்பாருங்கள் ▶பிறகு முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். SHARE.

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?

error: Content is protected !!