News January 21, 2025

வங்கி வாடிக்கையாளர்களுக்கு வந்தது GOOD NEWS

image

போலியான அழைப்புகளால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வங்கி/ நிதி நிறுவனங்கள் அழைப்புக்கும் (‘1600’ தொடங்கும்), மார்க்கெட்டிங் நிறுவனங்களின் அழைப்புக்கும் ( ‘140’ தொடங்கும்) தனித்தனியே எண்களை ஒதுக்கியுள்ளது. உ-ம்: வரும் அழைப்பு 1600-ல் தொடங்கினால், அது வங்கி அழைப்பாக இருக்கும். மெசேஜ்களுக்கும் இதே எண்கள் பொருந்தும். போலி கால்களை கண்டறிய இது உதவும்.

Similar News

News April 8, 2026

கற்பனையை மிஞ்சும் நிலவின் PHOTOS

image

நம் கற்பனைக்கும் எட்டாத சில அரிய போட்டோக்களை ஆர்டெமிஸ் 2 குழு எடுத்துள்ளது. பூமி உதிப்பது போன்றும், நிலவு – பூமி – சூரியன் ஒரே கோட்டில் இருந்தால் தென்படும் கிரகணத்தையும் அக்குழு போட்டோ எடுத்துள்ளது. இதற்கு முன்பாக 1968-ல் ( 58 ஆண்டுகள்) அப்பல்லோ 8 குழுவினர் நிலவை சுற்றிய போது, விண்வெளி வீரர் ​​பில் ஆண்டர்ஸ் பூமி உதிக்கும் போட்டோவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 8, 2026

வங்கிக் கணக்கில் பணம்… உஷார்!

image

சமீபகாலமாக சைபர் மோசடிகள் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. முக்கியமாக வாட்சப்பில் வரும் போலி லிங்க்கை கிளிக் செய்தவுடன் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தை அபேஸ் செய்துவிடுகின்றனர். அவ்வரிசையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது; உடனே சரிபார்க்கவும் என வரும் லிங்கை தொட வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது.

News April 7, 2026

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வில்வித்தை மங்கை

image

கை, கால் இழந்த உலகின் முதல் இளம் வீராங்கனையான பாயல் நாக் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார். 8 வயதில் மின்சாரம் தாக்கியதில் கை கால்களை இழந்த பாயல், வாயைக் கொண்டு வரைந்த ஓவியம் 2022-ல் வைரலானது. இதையடுத்து, பாராலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி பயிற்சியாளர் குல்தீப், பாயலுக்கு பயிற்சியளித்து சாதிக்க வைத்துள்ளார்.

error: Content is protected !!