News March 27, 2024
SRH Vs MI: முதல் வெற்றியை பெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான SRH & MI அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் SRH 9 முறையும், MI 12 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் SRH & MI அணிகள் நேரடியாக மோதும் முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.
Similar News
News February 8, 2026
உங்கள் உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் சிறுநீர்!

சிறுநீர் பரிசோதனை மூலம் பல நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தாலோ அல்லது ரத்தம் சேர்ந்து வந்தாலோ, அது கல்லீரல் அல்லது சிறுநீரக கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் துர்நாற்றம் வீசினால், ஏதேனும் தொற்று இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
News February 8, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மகளிருக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் முதல் அங்கு உரிமைத் தொகை ₹2,500-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை உயர்வால் , அம்மாநில அரசுக்கு கூடுதலாக ₹17.50 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தேர்தலையொட்டி மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News February 8, 2026
அரசு ஊழியர்களை அதிமுக ரத்த கண்ணீர் சிந்த வைத்தது: CM

அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக ஜாக்டோ ஜியோவின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் CM குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக கூட்டணி அமைந்துள்ள அதிமுக, எப்படி அரசு ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வியர்வைத்துளி சிந்திய அரசு ஊழியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்த கட்சி அதிமுக எனவும் சாடியுள்ளார்.


