News January 21, 2025
2 லட்சம் புத்தகங்களை நன்கொடை கொடுத்த CM

மாநிலத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் பெரிய நூலகங்களை திறக்க முடியாதவர்கள் சிறிய படிப்பகங்களையாவது தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் முதற்கட்டமாக 1000 நூல்களை அழகப்பா பல்கலைக் கழகத்தில் ‘வளர் தமிழ்’ நூலகத்திற்கு கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Similar News
News August 26, 2025
திமுக Ex MLA காலமானார்.. CM ஸ்டாலின் இரங்கல்

திமுக Ex MLA கலிலூர் ரஹ்மான் மறைவுக்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றதோடு, சிறப்பான பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார். கலிலூர் ரஹ்மான் மறைவால் தவிக்கும் உறவினர்கள், கட்சியினருக்கு தனது ஆறுதல்கள் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
News August 26, 2025
உக்ரைனுக்கு இனி நிதி உதவி கிடையாது: டிரம்ப்

உக்ரைனுக்கு இனி அமெரிக்கா நிதி உதவி செய்யாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் NATO நாடுகள் மூலம் தங்களை அணுக வேண்டும் எனவும், அப்படி அணுகினால் தாங்கள் NATO உடன் ஒப்பந்தம் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஏற்கனவே அதிக நிதி உதவி செய்துவிட்டதால், உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை தங்களுக்கு தர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.
News August 26, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

செப்டம்பரில் பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறையாகும். செப். 5-ம் ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.26-ல் காலாண்டு விடுமுறை தொடங்குவதால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை. இதுதவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மூலம் 6 நாள்கள் லீவு கிடைக்கிறது. இதனால், மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஜாலியோ ஜிம்கானா தான்..!