News March 27, 2024
இதுவரை ரூ.2.9 கோடி பணம் பறிமுதல்

மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 18, 2026
கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். <
News February 18, 2026
கோவை: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 18, 2026
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

கோவை–ஜெய்ப்பூர் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவையிலிருந்து வியாழக்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில் (06181), திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை ஜெய்ப்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு புதன்கிழமை கோவையை வந்தடையும். கோடைக்கால பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


