News January 21, 2025

பரந்தூரை தேர்வு செய்தது ஏன்? – தமிழக அரசு

image

பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது விமான நிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Similar News

News August 23, 2025

காஞ்சிபுரத்தில் இந்த இடங்களை எல்லாம் நோட் பண்ணிக்கோங்க!

image

கோயில் நகரமான காஞ்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களை இங்கு காணலாம். ▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில் ▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில் ▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில் ▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில் ▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் ▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில் ▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில். ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

காஞ்சிபுரம் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? வீட்டு ஓனர் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக பெற வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

காஞ்சிபுரம்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே, இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? இதற்கு தமிழக அரசின் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!