News January 21, 2025
இலவச கல்வி முதல் இன்சூரன்ஸ் வரை: பாஜக தேர்தல் வாக்குறுதி

டெல்லி தேர்தலை முன்னிட்டு 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை BJP வெளியிட்டுள்ளது. *தேவைப்படும் குழந்தைகளுக்கு KG முதல் PG பட்டப்படிப்பு வரை இலவச கல்வி. *போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஒருமுறை ₹15,000 + பயணச் செலவு. *தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் SC மாணவர்களுக்கு மாதம் ₹1,000. *வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரியம், ஆயுள் காப்பீடு என பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
Similar News
News March 20, 2026
NDA கூட்டணிக்கு ஆதரவு

தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் அக்கட்சியின் பிரதிநிதிகள் நயினாரை நேரில் சந்தித்து NDA கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர். அத்துடன், 234 தொகுதிகளிலும் NDA கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.
News March 20, 2026
இந்த சீசனில் 3,000 ரன்களை அடிக்க விரும்புகிறேன்.. வைபவ்

வரும் IPL தொடரில் 2,000 முதல் 3,000 ரன்களை அடிப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி நகைச்சுவையாக கூறியதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த சீசனில் உங்களின் ரன் டார்கெட் என்ன என கேட்டதற்கு, வைபவ் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தனிப்பட்ட சாதனைகள் முக்கியம் அல்ல, கோப்பையை வெல்வதே லட்சியம் எனவும் பேசியுள்ளார். இந்த சீசனில் வைபவ் எவ்வளவு ரன்கள் அடிப்பார் என நினைக்கிறீங்க?
News March 20, 2026
CINEMA 360: சிறை இயக்குநரை லாக் பண்ணும் தனுஷ்!

‘சிறை’ இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது *தேர்தல் காரணமாக ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம் *நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்ட தான், தற்போது சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளதாக ரஷ்மிகா கூறியுள்ளார். தெலங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் விழாவில் ‘கேர்ள் பிரெண்ட்’ படத்திற்காக அவர் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.


