News January 21, 2025

ஹேப்பி பர்த்டே சாண்டா

image

நக்கல், நையாண்டி கலந்த இவரின் ஒன் லைன்களுக்கு சிரிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. கலாய் மன்னனாக வளர்ந்தவர், செகண்ட் ஹீரோ இனி போதும் தில்லுக்கு துட்டு என முடிவெடுத்து சோலோ ஹீரோவான அவருக்கு இன்று வயது 44. ஹீரோவாக கலக்கினாலும், மதகஜராஜா படத்தின் வெற்றி சொல்லும் Vintage காமெடி சாண்டாவை ரசிகர்கள் எந்த அளவிற்கு மிஸ் பண்ணுகிறார்கள் என்று. உங்களுக்கு பிடித்த சந்தானம் காமெடியை சொல்லுங்க?

Similar News

News August 26, 2025

பலரும் பார்த்திராத விஜய்- சங்கீதா திருமண போட்டோஸ்!

image

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக இல்லை எனவும் செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், வெளியான எந்த செய்தியிலும் உண்மையில்லை என்றும் தனது மகளின் படிப்பிற்காகவே சங்கீதா வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேற்று, விஜய்- சங்கீதா திருமண நாளை முன்னிட்டு, அவர்களது திருமண போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளன.

News August 26, 2025

திமுக அமைச்சருக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை

image

உடல் நலக்குறைவால் <<17522156>>அமைச்சர் ஐ.பெரியசாமி<<>>, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டாக்டர்கள் குழு, சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News August 26, 2025

தோனியால் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு: திவாரி

image

தன்னை தோனிக்கு பிடிக்காததால் தான், தனது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்ததாக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். தோனி அவருக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பளித்ததாகவும், தன்னை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 12 ODI போட்டிகளில் விளையாடியுள்ள திவாரி 1 சதம், 1 அரைசதம் என 287 ரன்களை எடுத்துள்ளார்.

error: Content is protected !!