News January 21, 2025
தேனியில் உள்ள 130 ஊராட்சிகளில் கூட்டம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது அடிப்படை வசதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மனுக்களை அளித்து பயன் பெறுமாறு இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
தேனியில் சிறுமி உயிரிழப்பு

கூடலுார் பகுதியை சேர்ந்த அரவிந்தனின் மகள் சிவானி (11). பள்ளி மாணவியான இவர் அதே பகுதியில் உள்ள இவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன் தினம் பாட்டி வீட்டில் உள்ள சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுமி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் சிறுமி கழுத்தை இறுக்கியது. இதில் சிறுமி உயிரிழந்தார். இதுக்குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News August 13, 2025
தேனி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 அரசு மானியம்….APPLY!

தேனிவாசிகளே! தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 13, 2025
தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்! (UPDATED)

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!