News January 21, 2025

கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி விதிக்கும் அமெரிக்கா

image

பிப்.1ம் தேதி முதல் கனடா, மெக்சிகோ மீது அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபராக பதவியேற்றதும், சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் குறித்து கவலை தெரிவித்த அவர், முந்தைய ஆட்சி அதனை தடுக்க தவறியதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், அமெரிக்க குடிமக்களை வளப்படுத்த, வெளிநாடுகளுக்கு அதிக வரிவிதிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

image

வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் போது, கண்டிப்பாக இந்த தவறுகளை செய்யக் கூடாது:
1. வாங்கி வரும் விநாயகர் சிலையின் தும்பிக்கை வலது புறமாக இருக்கக்கூடாது.
2. விநாயகர் சிலையை தனியாக வைக்காமல், லட்சுமி அல்லது சிவன்- பார்வதி, முருகன் விக்ரகம் அல்லது படத்துடன் சேர்த்து வைக்கவேண்டும்.
3. வீட்டில் விநாயகரை வைத்த பிறகு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது. SHARE IT.

News August 26, 2025

பலரும் பார்த்திராத விஜய்- சங்கீதா திருமண போட்டோஸ்!

image

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக இல்லை எனவும் செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், வெளியான எந்த செய்தியிலும் உண்மையில்லை என்றும் தனது மகளின் படிப்பிற்காகவே சங்கீதா வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நேற்று, விஜய்- சங்கீதா திருமண நாளை முன்னிட்டு, அவர்களது திருமண போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளன.

News August 26, 2025

திமுக அமைச்சருக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை

image

உடல் நலக்குறைவால் <<17522156>>அமைச்சர் ஐ.பெரியசாமி<<>>, மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு டாக்டர்கள் குழு, சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!