News January 21, 2025
‘DD NEXT LEVEL’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘DD NEXT LEVEL’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் இந்தாண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 18, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News March 18, 2026
தேர்தல் தேதி மாற்றமா? திடீர் பரபரப்பு

புதுச்சேரி பேரவை தேர்தலை TN-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்.23 அன்றே நடத்த கோரி ECI-க்கு புதுவை DMK கடிதம் அனுப்பியுள்ளது. இரு தேர்தல்களும் வெவ்வேறு நாள்களில் உள்ளதால், TN-ல் பணியாற்றும் புதுவையை சேர்ந்தோர் சிரமப்படுவர் என்றும் DMK குறிப்பிட்டுள்ளது. புதுவை பேரவையின் பதவிக்காலம் ஜூன் 15 வரை உள்ளபோதும், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதிலுள்ள அவசரம் குறித்து விளக்க வேண்டும் என்றும் DMK கேட்டுள்ளது.
News March 18, 2026
விஜய்யை எதிர்த்து ரஜினி ரசிகர் போட்டி

‘எங்கள தொட்டவங்கள நாங்க விட்டதே இல்ல’ என ரஜினி ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட து.செ., கூறியுள்ளார். தவெக எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ரஜினி ரசிகர்கள் களமிறங்குவர் என்றார். தற்போது நெல்லையில் போட்டியிட வேட்புமனு வாங்கியுள்ளதாகவும், விஜய் நிற்கும் தொகுதியிலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ரஜினியிடம் ஆதவ் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


