News January 21, 2025

ஒரு காயினின் விலை ₹94 லட்சம்

image

கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டிஜிட்டல் கரன்சியாக அறிமுகமாகி புரட்சி செய்த பிட்காயினின் இன்றைய விலை என்ன தெரியுமா? ₹94 லட்சம் ரூபாய். 2016 ஆம் ஆண்டு இந்த காயின் அறிமுகமானபோது, இதன் விலை வெறும் ₹30,000. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட ₹50 லட்சத்துக்கு வர்த்தகம் ஆன பிட்காயின், தற்போது டிரம்ப் பதவியேற்பால் ₹94 லட்சமாக உயர்ந்துள்ளது.

Similar News

News March 19, 2026

BREAKING: தங்கம் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்து நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹2,160 சரிந்த நிலையில், மாலையில் மேலும் ₹3,200 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வெள்ளி விலை மாலையிலும் மாற்றமின்றி கிலோ ₹2.65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.

News March 19, 2026

பும்ராவுக்கு அப்புறம் யார்? அஸ்வின் கேள்வி

image

பும்ராவின் ஓய்விற்கு பிறகு, இந்திய அணியின் பவுலிங் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இதனால் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் பவுலராக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். ஒரு தொடரையோ போட்டியையோ வெல்வதில் பவுலர்கள்தான் முக்கிய பங்காற்றுவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார்.

News March 19, 2026

பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இன்று வரலாறு காணாத வகையில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்றைய நாளின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் குறைந்து 74,207 புள்ளிகளிலும், நிஃப்டி 776 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளிலும் நிறைவுபெற்றுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ₹13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!