News March 27, 2024
ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சிக்கிறது?

ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவை காப்பாற்ற அவர் தவறிவிட்டார்”என்றார்.
Similar News
News November 6, 2025
AI சிலருக்கு பணம் காய்க்கும் மரம்: பலருக்கு துயரம்

தொழில்துறையில் AI வளர்ச்சியால் எலான் மஸ்க் போன்ற பில்லியனர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள்; ஆனால் சாதாரண மக்கள் கடுமையான வேலை இழப்பை சந்திப்பார்கள் என நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார். சாதாரண மக்களின் கஷ்டத்தை தொழிலதிபர்கள் எப்போதும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். அதேவேளையில் கல்வி, சுகாதாரத்தில் AI நிறைய நல்ல விஷயங்களை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
அட, இதெல்லாம் இந்தியா கண்டுபுடிச்ச விளையாட்டுகளா?

இந்தியாவில் அதிகமாக விளையாடப்படும் கேம், கிரிக்கெட் தான். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து. அதேசமயம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பல விளையாட்டுகள் இன்றும் பிரபலமாக உள்ளன தெரியுமா? அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 6, 2025
RCB அணி விற்பனை.. வாங்குவதற்கு கடும் போட்டி

2025 ஐபிஎல் சாம்பியன்ஸான RCB அணியை விற்க டியாஜியோ பிஎல்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. RCB ஆடவர், மகளிர் அணிகளை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அவை முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதானி குழுமம், சீரம் இன்ஸ்டிடியூட், JSW குரூப்ஸ் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் RCB அணியின் பெயரும் மாற்றப்படவுள்ளது.


