News January 21, 2025

பழங்குடியினர் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழங்குடியினர் அலுவலகத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News March 10, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

ஜலகனூரில் கிரிக்கெட் விளையாட்டில் பயங்கரம்

image

குரிசிலாப்பட்டு அடுத்த ஜலகனூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், ஏழுமலை என்ற வாலிபரை ஒரு கும்பல் தாக்கியது. இதனைத் தடுத்த அவரது தாயாரும் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் இன்று (மார்ச்-9) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 9, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.<<>>gov.in இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!