News January 21, 2025
700 லஞ்சம் வாங்கிய விஏஓவிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை

பருத்திக்கோட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு உழவர் அட்டை கேட்டு விண்ணப்பித்தபோது, விஏஓ தனபாலசுப்ரமணியன் ரூ.700 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் தனபாலசுப்பிரமணியனுக்க 2 ஆண்டு சிறை தண்டனை – 1,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு.
Similar News
News August 23, 2025
தஞ்சையில் இத்தனை பழமையான இடங்களா?

➡️கல்லணை : 2000 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை பெரிய கோயில் : 1000 ஆண்டுகள் பழமை
➡️தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்: 900 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் : 500 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை அரண்மனை: 500 ஆண்டுகள் பழமை
➡️பீரங்கி மேடை: 400 ஆண்டுகள் பழமை
➡️ஷ்வார்ட்ஸ் தேவாலயம்: 220 ஆண்டுகள் பழமை
➡️மனோரா கோட்டை: 200 ஆண்டுகள் பழமை
➡️ நம்ம ஊரு பெருமைகளை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 23, 2025
ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.