News January 21, 2025
வருமான வரி விதிப்பில் மாற்றம் வருகிறது

பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் பல மாற்றங்களை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய வரி விதிப்பு முறையில் Standard deduction தற்போது ₹75,000ஆக உள்ளது. அதனை ₹1 லட்சமாக உயர்த்தவும், ₹12 முதல் ₹15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 20%க்கு பதிலாக 15% வரி செலுத்தவும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 8, 2026
நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.
News March 8, 2026
ராசி பலன்கள் (08.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 8, 2026
டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்

ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதியளித்த டிரம்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்த நாங்கள், வெளிநாடுகளின் உத்தரவுகளை ஏற்கமாட்டோம். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று X தளத்தில் டிரம்ப்பை டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலக அமைதிக்கு அடித்தளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


