News January 21, 2025
ரிஷப் பண்ட்க்கு LSG ஜெர்ஸியை வழங்கிய கோயங்கா

ரிஷப் பண்ட்க்கு LSG அணி ஜெர்ஸி அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வழங்கினார். சமீபத்தில் நடந்த IPL மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக பண்ட் மாறியுள்ளார். அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து தகுதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் பண்டிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 4, 2026
BREAKING: கனமழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 3 நாள்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.4) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. அதேபோல், நாளை ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். அலர்ட் மக்களே!
News April 4, 2026
விஜய் ஒன்றும் அப்படி கிடையாது: செல்லூர் ராஜு

விஜய்யை செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார். MGR யார் என்பது தேர்தலுக்கு பின்பே விஜய்க்கு தெரியவரும் என்றும், தான் ஒரு நடிகர் என்பதிலிருந்தே விஜய் இன்னும் வெளியே வரவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திருச்சி பரப்புரையில் MGR சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தியது கவனம் பெற்றிருந்தது.
News April 4, 2026
தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு

ஏப்.23-ஐ நோக்கி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், SM-ல் ஆற்காடு பஞ்சாங்கம் வைரலாகிறது. அதில், ‘2026 தேர்தலில் உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமையும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கணிப்பு ஜெயிக்குமா? விடைக்காக அடுத்த மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.


