News January 21, 2025
உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு

கடந்த ஆண்டு உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.1,275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 புதிய கோடீஸ்வரர்கள் உருவாவதாகவும், ஆசியாவில் மட்டும் 41 கோடீஸ்வரர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகின் பத்து பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.800 கோடி அதிகரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 17, 2026
சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

திமுக கண்டன கூட்டத்தில் <<19406314>>நயன்தாரா<<>> குறித்த சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகம் இல்லாத அதிமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா பெயரை எந்த நோக்கத்துடன் கூறவில்லை என்று சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், அவர் மன்னிப்பு கேட்கக்கோரி கண்டனங்கள் வலுத்து வருகிறது.
News March 17, 2026
பெட்ரோல், டீசல்.. சற்றுமுன் அறிவிப்பு வெளியானது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பெட்ரோலிய துறை துணை செயலாளர் சுஜாதா, பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவு இருப்பதால் மக்கள் பீதியில் அதிகளவு வாங்கி சேமிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து வணிக LPG நுகர்வோரும் PNG-க்கு மாற வேண்டும் என்றார்.
News March 17, 2026
CINEMA 360: மீண்டும் தளபதி காம்போ!

*சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில் ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம் *H.வினோத்- சூர்யா காம்போவில் விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளதாம் *மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது *‘அரசன்’ படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம் *பைனான்ஸ் பிரச்னையால், ரவி மோகன் – SJ சூர்யா நடிக்கும் படம் கைவிடப்படலாம் என கூறப்படுகிறது.


