News January 21, 2025

மின்சார வாகனங்கள் கட்டாயம் இல்லை: ட்ரம்ப்

image

அமெரிக்காவில் மின்சார வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் வாங்கப்படுவதாக புதிய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மக்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஆண், பெண் பாலினங்களுக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மூன்றாம் பாலினத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News March 17, 2026

திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

image

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

News March 17, 2026

வீட்டில் தங்க நகை இருக்குதா.. எச்சரிக்கை

image

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வீட்டில் அதிகளவில் தங்கம் வைத்திருந்தால் சிக்கல் எழுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமான வரி விதிப்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரை ஆவணங்களின்றி தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால், ரெய்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.

News March 17, 2026

ரஜினி பதிவில் முற்றுப்புள்ளி.. முட்டிமோதும் ரசிகர்கள்

image

ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு <<19405631>>ரஜினி<<>> பதிலடி கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்க வகையில், தனது X பக்கத்தில், ‘ . ‘ என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கையை ரஜினி வெளியிட்டிருந்தார். இதனை பகிர்ந்துவரும் அவரது ரசிகர்கள், ‘தலைவர் சம்பவம் வேற மாதிரி’ என கூறி வருகின்றனர். முன்னதாக, அடுத்த சூப்பர் ஸ்டார், காக்கா – கழுகு கதை என ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!