News January 20, 2025
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 1835 வழக்குகள் பதிவு

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் 121 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் 4974 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இதில், 1835 வாகனங்கள் மீது உரிய ஆவணங்கள் இல்லாததன் காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News September 30, 2025
தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.
News September 30, 2025
தென்காசி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

தென்காசி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தென்காசி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <
News September 30, 2025
கீழப்பாவூர் ஏக தின தீர்த்தவாரி உற்சவம் தேதி அறிவிப்பு

கீழப்பாவூர் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதின தீர்த்தவாரி உற்சவம் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலைஏழு மணி முதல் பெருமாள் தெப்ப குளத்திற்கு பெருமாள் எழுந்தருளல், தொடர்ந்து பல்வேறு பூஜைகள், தீர்த்த வலம் வருதல், தீபாராதனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.