News January 20, 2025

30 வயதை தாண்டிய ஆண்களுக்கு…

image

விறகு வெட்டும்போது, உடலில் தசைகளுக்கு அதிக ரத்தவோட்டம் செல்வதால், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு உயருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதிலென்ன செய்தி என்கிறீர்களா? ஆண்களுக்கு 30- 40 வயதில் ஆண் தன்மைக்கு காரணமாக டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைய தொடங்கும். இதனால் உடலுறவு செயல்பாடு, உடல் வலு குறையத் தொடங்கும். இதை தடுக்க எடை தூக்குதல் உள்ளிட்ட <<15206993>>சில வழிமுறைகளை<<>> பின்பற்ற மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர்.

Similar News

News March 14, 2026

வேலூர்: ஆசைவார்த்தை கூறிய காதலன் கைது!

image

வேலூர்: காட்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால் தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ராஜேஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில் காட்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.

News March 14, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் இந்த வாரத்தில் பெரும் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதியான இன்று தலைகீழாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $98(இந்திய மதிப்பில் ₹8,982) சரிந்து $5,020-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி 1 அவுன்ஸ் $5 குறைந்து $80 ஆக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கம் சுமார் $250(இந்திய மதிப்பில் ₹23,151) குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

News March 14, 2026

CM ஸ்டாலின் ₹2,000 கொடுப்பார்: அப்பாவு

image

வரும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 53% வாக்குகளுடன் வெற்றி பெறும் என அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், TN மக்கள் எப்போது தேர்தல் வரும், எப்போது CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனாக வாக்களிக்கலாம் என காத்திருக்கிறார்கள் என்றார். மீண்டும் CM ஆக ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார் என்றும், அப்போது உரிமை தொகையாக ₹1,000 கொடுக்க மாட்டார், ₹2,000 கொடுப்பார் எனவும் கூறினார்.

error: Content is protected !!